அமைவிடம் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் நவகிரகஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மன்னார்குடி பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும், நீடாமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தல வரலாறு : சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98 வது தலமாக இத்தலம் விளங்குகிறது. இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. தல புராணம் : திருவாரூர்...