தினசரி 100 பக்தர்களுக்கும், வியாழக்கிழமைகளில் 200 பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத் திட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எந்த நாளிலும் தினசரி உணவுக்காக ரூ.3,500/- செலுத்தி பங்கேற்கலாம். வியாழக்கிழமைகளில் உணவளிக்க ரூ.7,000/-. அதுமட்டுமின்றி, பொது மக்கள் பிறந்த நாள், திருமண நாள் அல்லது எந்த ஒரு நல்ல நாள் போன்ற எந்த நாளிலும் பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.70,000/- தொகையை டெபாசிட் செய்யலாம். அந்தத் தொகை நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டியானது பக்தர்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படும். கோயில் நிர்வாகம் அவர்கள் தேர்ந்தெடுத்த நாளில் சிறப்பு அர்ச்சனை செய்து, விபூதி மற்றும் குங்குமப் பிரசாதம் பக்தர்கள் தெரிவிக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அன்னதான திட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவான் அருள் பெற அழைக்கப்படுகிறார்கள்.